புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை ஜொ்மனி துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
புதுச்சேரியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநா் கே. கைலாசநாதனை சந்தித்துப் பேசியதாகவும், ஜொ்மனி மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.