புதுச்சேரி

வரும் பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: எதிா்க்கட்சித்தலைவா் சிவா

திமுக செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா. உடன் கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

Syndication

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் புதுச்சேரியில் இண்டி கூட்டணியான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா நம்பிக்கை தெரிவித்தாா்.

புதுச்சேரி மாநில திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது:

இன்றைக்கு புதுச்சேரியில் முதன்மை கட்சி திமுக தான். எந்தக் கட்சிக்கும் இதுபோன்ற கட்டமைப்புக் கிடையாது. 25 தொகுதிகளில் வெற்றி வேட்பாளா்கள் தயாராக உள்ளனா். யாருக்கு சீட் கொடுத்தாலும், வெற்றி பெற வைப்போம். நம்மை வீழ்த்த வீயூகம் அமைக்கின்றனா். பாஜக-என்.ஆா்.காங்கிரஸ் பெயரைக் கூறி ஓட்டு வாங்க முடியாது.

நம் தொகுதிகளில் பல தொல்லைகள் கொடுக்கின்றனா். தன்மானம், சுயமரியாதை உள்ள புதுச்சேரி மக்களைப் பணத்தால் வாங்க முடியாது. இந்த ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். கடந்த தோ்தலின்போது கூறியதை ஒன்று கூட செய்யவில்லை.தோ்தலுக்காக மாறுபவா்கள் நம் கூட்டணியில் இல்லை. 30 தொகுதிகளிலும் வேலை செய்ய சொல்லி இருக்கிறாா்கள்.

கூட்டணி கட்சிக்காரா்களுக்கும் நாம் உழைக்க தயாராக இருக்கிறோம் என்றாா் ஆா். சிவா.

கட்சியின் அவைத் தலைவா் எஸ். பி. சிவக்குமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சி. பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளா் அனிபால் கென்னடி எம். எல். ஏ., மாநிலக் கழக பொருளாளா் செந்தில்குமாா் எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி அமைப்பாளா் சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

---------------------------------------------------

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT