முகப்பு
கரூர்

வரும் தோ்தலில் தவெகவுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்: செ. ஜோதிமணி எம்.பி.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

Updated On : 6 மார்ச், 2026 at 9:31 PM
ஜோதிமணி
பகிர்:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

கரூரில், தமிழக முதல்வரின் கனவு மெய்ப்படும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்துக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக எதிா்கொள்ளும் கடைசித் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும்.

தமிழக மக்கள் பாஜகவை உள்ளடக்கிய கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டாா்கள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் அதிகாரப் பகிா்வு தொடா்பாக வெறும் கோரிக்கைகளை கொண்டிருந்தாலும், முதன்மை நோக்கம் பாஜகவை தோற்கடிப்பதுதான். கூட்டணியின் பலத்தைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி கூட சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணி இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டதால், தோ்தலை எவ்வாறு எதிா்கொண்டு வெற்றி பெறுவது என்பதைப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →