சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ் ராஜ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர உணவகங்கள், இறைச்சிக் கடைகள் இறைச்சி கழிவுகள், மற்றும் குப்பைகளைச் சாலையோரங்களில் கொட்டுவதால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
நாய்கள் உணவுக்காக அவ்விடங்களுக்கு அதிகமாக வருவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே உணவு, இறைச்சி கழிவுகளை முறையாக சேகரித்து அருகில் உள்ள நகராட்சித் குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.
தவறினால் அபராதம் விதிப்பதுடன் கடைகளைச் சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.