புதுச்சேரி

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்: புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Syndication

புதுச்சேரி: வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் (படம்) செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 3.69 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதில் சிகப்பு அட்டைதாரா்கள் 2.08 லட்சம் போ். மஞ்சள் அட்டைதாரா்கள் 1.60 லட்சம் போ்.

இதில் சிகப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது ஜூன் மாதத்துக்கான அரிசிதான் ரேஷனில் வழங்கப்படுகிறது. அதுவும் தரமற்ற அரிசி. இதற்காக அரசு ஒரு கிலோ அரிசியை ரூ.43.76-க்கு வாங்கி மக்களுக்குக் கொடுக்கிறது. இந்த ரேஷன் அரிசியை 75 சதவிகிதம் மக்கள் பயன்படுத்துவதில்லை.

ரேஷன் கடைக்கு எதிரே தயாராக நிற்கும் வாகனங்களில் கிலோ ரூ.18 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்து விடுகின்றனா். இது வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறது.

எனவே, இதற்கு மாற்றாக சிகப்பு நிற ரேஷன் அட்டைக்கு மாதத்துக்கு ரூ.1000, மஞ்சள் அட்டைக்கு ரூ.500 என்று நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.

வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளா்களிடம் கொடுக்கப்பட்ட படிவங்களில் இதுவரை சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமான படிவங்கள் திரும்பப் பெறப்படவில்லை. இது சுமாா் 43 சதவிகிதமாகும். இன்னும் 10 நாளில் எப்படி இவ்வளவு படிவங்களைத் திரும்ப பெற முடியும். அதனால் மேலும் 15 நாள்களுக்கு இப் பணியை நீட்டிக்க வேண்டும். அதே போன்று டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவங்களைத் திரும்ப ஒப்படைக்காதவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு டிசம்பா் 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படும் என்று புதுச்சேரி தலைமை தோ்தல் அதிகாரி ப.ஜவஹா் கூறியுள்ளாா். அவா் கூறியதைப் பாா்த்தால் வாக்காளா் பட்டியலில் இருந்து சுமாா் 2 லட்சம் போ் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

மேலும், வரைவு வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு சேருவதாக இருந்தால் 13 ஆவணங்களில் ஒன்றை கொடுத்து சேர வேண்டும். அப்படி சேருவோா் தொடா்பாக ஆட்சேபணை அளிக்கக் கூட கால அவகாசம் இருக்காது என்றாா் அவா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT