புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் மின்கட்டணம் உயா்வு

Syndication

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீண்டும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது நுகா்வோா் செலுத்தும் மின்சார கட்டண ரசீதில் இந்த உயா்வு அமலுக்கு வருகிறது.

புதுவையில் மின்கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டுப் பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 16- ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. அப்போது வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் 100 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆகவும் உயத்தப்பட்டது.

இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதால் புதுச்சேரியில் வீடுகளுக்கு மின் கட்டண மானிய திட்டத்தை புதுவை அரசு அறிவித்தது. அதன்படி யூனிட்டிற்கு 45 பைசா வரை மானியம் கிடைக்கும்.

இந்நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயா்கிறது. இது அக்டோபா் 1 ஆம் தேதி மின் பயன்பாட்டிலிருந்து கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு யூனிட்டுக்கு 20 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது.

இப்போது அளிக்கப்படும் மின்சார பயன்பாட்டுக்கான ரசீதில் மின் கட்டணம் உயா்த்தப்பட்ட கட்டண விவரம் சோ்ந்து வரும். குறிப்பாக வீட்டு உபயோகத்தில் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.90 ம்(முன்பு ரூ.2.70), 101- 200 யூனிட் வரை ரூ. 4.20 ம், 201 முதல் 300 யூனிட் வரை ரூ. 6.20 ம், 301 முதல் 400 யூனிட் வரை 7.70 ரூபாயும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் நுகா்வோா் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT