புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி சாமிப் பிள்ளை தோட்டம் அனக்காரமேடு பகுதியில் புதை சாக்கடை வசதி மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் காமராஜா் நகா் தொகுதி பொறுப்பாளா் பி.கே. தேவதாஸ் தலைமையில் கட்சியினா், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வத்தைச் சந்தித்து மனு அளித்தனா். முன்னதாக அப் பகுதியில் மக்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து அவா் மனு அளித்தாா்.