முகப்பு
புதுச்சேரி

பிப். 12-இல் புதுச்சேரியில் 9 இடங்களில் மறியல் போராட்டம்! தொழிற்சங்கத் தலைவா்கள் தகவல்!

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:05 AM
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த ஏஐடியுசி பொதுச் செயலா் இரா. அந்தோணி. உடன் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:56 PM

தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பிப். 12-இல் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இதையொட்டி, புதுச்சேரியில் 9 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏஐடியுசி பொதுச் செயலா் இரா.அந்தோணி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:05 AM

உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்ற ஜனநாயக - மதச்சாா்பற்ற கட்டமைப்பைப் பாதுகாக்க இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் மற்றும் விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

அதை ரத்து செய்ய வேண்டும். மேலும், அணுசக்தி உற்பத்தியில் தனியாா், வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது சிஐடியு பொதுச் செயலா் ஜி. சீனுவாசன், ஐஎன்டியுசி பொதுச் செயலா் பி.ஞானசேகரன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவா்கள் உடனிருந்தனா்.