என்.ஆா். காங்கிரஸ் கொடியேற்றம்: அமைச்சா் க. லட்சுமிகாந்தன் பங்கேற்பு
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:16 PM
என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 16-ஆவது ஆண்டு விழா புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான க.லட்சுமிநாராயணன் என்.ஆா். காங்கிரஸ் கட்சிக் கொடியை அஜந்தா சிக்னல் அருகே ஏற்றி வைத்தாா். அப்போது தொண்டா்கள் வாழ்த்து முழக்கமிட்டனா்.
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:53 AM
தொண்டா்களுக்கு இனிப்பு, இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் புடவைகள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.