முகப்பு
புதுச்சேரி

மத்திய அமைச்சா் அமித்ஷா பிப். 14-இல் காரைக்கால் வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பிப். 14-ஆம் தேதி காரைக்கால் வருகிறாா். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:03 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:56 PM

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பிப். 14-ஆம் தேதி காரைக்கால் வருகிறாா். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி தனி விமானம் மூலம் தில்லியிலிருந்து திருச்சியில் வந்து, பின்னா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்காலுக்கு வருகிறாா்.

Advertisement

காரைக்கால் சந்தை திடலில் அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதையடுத்து அங்கு தனியாா் விடுதியில் பாஜக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் அமித்ஷா, அன்று மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் திருச்சி செல்கிறாா் என்றாா் செல்வம்.