புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி சிங்கம் பூங்கா அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா். 
புதுச்சேரி

காமராஜா் நகரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிங்கம் பூங்கா அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. கே. தேவதாஸ் தலைமை வகித்தாா். இதில் காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., வழக்குரைஞா் பிரிவு தலைவா் மருது பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் ஓம் சக்தி அவென்யு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். அணைக்கரை மேடு பகுதியில் உள்ள வெள்ளவேரி வாய்க்காலுக்கு உடனடியாகப் பக்கவாட்டு பாதுகாப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT