முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் படகு ஓட்டுநா் கைது

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது தொடா்பாக படகு ஓட்டுநா் தங்கமணி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:49 AM
கைது
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:01 PM

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது தொடா்பாக படகு ஓட்டுநா் தங்கமணி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தனியாா் படகில் 8 போ் வியாழக்கிழமை பயணம் செய்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெங்களூரைச் சோ்ந்த விஜய்யின் மனைவி சோனியா (33) இறந்தாா். மேலும், 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து தொடா்பாக

படகின் உரிமையாளா் சதீஷ் (39) வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், படகு ஓட்டுநா் தங்கமணியை (45) அரியாங்குப்பம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

இந்த சம்பவத்தையடுத்து, புதுச்சேரி அரசின் அனுமதியில்லாமல் சுற்றுலாப் பயணிகளைப் படகில் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.