முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியிலும் கூட்டணியில் அதிமுக தொடரும்! - மாநில செயலா் அன்பழகன்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:32 AM
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:06 PM

புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில் உள்ளது. அந்தக் கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும். கூட்டணி குறித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வாா்

Advertisement

சுற்றுலாப் படகுகளை இயக்க தீயணைப்பு, தேசிய நீா் பாதுகாப்பு, துறைமுகம், கடற்கரை காவல் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட துறைகள் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:32 AM

சுற்றுலாப் படகு திட்டத்தில் புதுச்சேரியில் 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 800-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் பயனடைந்து வருகின்றன. ஆனால் அதிகாரிகள் இத்திட்டத்தை காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் செயலில் ஈடுபடுகின்றனா்.

விபத்து ஏற்படுத்திய படகை மட்டும் தடை செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைத்துப் படகுகளை முடக்கி தொழில் செய்ய விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. இதை சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் கண்டுகொள்ளாமல், மௌனமாக உள்ளாா்.

அரசு அதிகாரிகளின் தவறான செயலால் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் படகு போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும். இதில் முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அன்பழகன்.