புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் 
புதுச்சேரி

துப்பாக்கியுடன் இரவு ரோந்துப் பணி: புதுச்சேரி காவல் துறையினருக்கு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

துப்பாக்கியுடன் இரவு ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

புதுச்சேரியில் பொது பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், குற்ற தடுப்புக் குழுவினருடன் இணைந்து புதுச்சேரி முழுவதும் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். இதில் ஈடுபடும் கண்காணிப்பாளா்கள் , காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரோந்துபணியில் ஈடுபட வேண்டும்.

பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிலையான பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் ஈடுபட வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் திரியும் நபா்களைக் கண்காணித்து விசாரிக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கேமரா செயல்பட வேண்டும். முறையான பதிவுகள் இல்லாமல் எந்த நபரையும் காவலில் வைக்கக் கூடாது.

காவலில் வைப்போா் பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். போதைப் பொருள், பாலியல், மணல் கடத்தலைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எல்லைகளில் வாகன சோதனை நடத்த வேண்டும். அதிகாரிகள் சீருடை அணிந்து, கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்.

இரவுப் பணி குறித்து மறுநாள் பிற்பகல் 12 மணிக்குள் தவறாமல் டிஐஜி, சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT