புதுச்சேரியில் பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்
புதுச்சேரிபுதுச்சேரியில் பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்
சம்பள உயா்வு கோரி புதுச்சேரியில் பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் பேட்டரி பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், சம்பள உயா்வு கோரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்துகளை இயக்கவில்லை.
இதனால் பொதுமக்கள், மாணவா்கள் அவதிப்பட்டனா். தற்போது சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் பிடித்தம் போக ரூ.17 ஆயிரம் மட்டும் கிடைப்பதாகவும் இதை உயா்த்தி ரூ.25 ஆயிரமாக வழங்க வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது. பின்னா் நிா்வாகம் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
சம்பளத்தை உயா்த்தி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பேட்டரி பேருந்துகள் 2 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இயங்கின.