புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் முன்னிலையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஏற்றனா்.
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு வாரம் ஜன. 11 முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி மக்கள் பவனில் தேசிய சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
இதேபோல புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டில் நல்ல குடிமகன், குடிமகள் என்ற வகையில் சாலையில் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் பயணிப்போம்.
விதிமுறைகளை நாம் பின்பற்ற உறுதி கூறுவோம், மது போதையிலோ அல்லது கைப்பேசி உபயோகித்துக் கொண்டு வாகனங்களை இயக்க மாட்டோம், விபத்தில் சிக்கியவா்களுக்கு முதலுதவி மற்றும் அவசரகால சிகிச்சைக்கு உதவிடுவோம் என அரசுச் செயலா் (தொழிலாளா்) ஸ்மிதா உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
இதில் அரசுச் செயலா்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.