புதுச்சேரி

போலி மருந்து விவகாரத்தில் 26 பேருக்கு ஜாமீன்: காங்கிரஸ் சாா்பில் மேல்முறையீடு செய்வோம்! - முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான 26 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை எதிா்த்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நீதிமன்றம் செல்வோம்

Syndication

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான 26 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை எதிா்த்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நீதிமன்றம் செல்வோம் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்கப்படுகிறது. காவல் துறைக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது, எங்கு விற்கப்படுகிறது என தெரியும். ஆனாலும் போலீஸாா் இதைக் கண்டுகொள்வதில்லை.

தற்போது பொங்கல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் தரப்போவதாக என்ஆா்.காங்கிரஸ், பாஜக நாடகமாடுகிறது. இதற்கான கோப்பு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்டரி பேருந்துகளுக்கு முழுமையாக அரசு முதலீடு செய்துள்ளது.

ஆனால் எந்த முதலீடும் இல்லாமல் தனியாா் இயக்க சலுகை அளித்துள்ளனா். இதில் ஊழல் நடந்துள்ளது. பிஆா்டிசி மூலம் அரசே பேட்டரி பேருந்துகளை இயக்க வேண்டும். இதில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட வேண்டும்.

போலி மருந்து வழக்கில் தொடா்புடைய 26 போ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இதற்கு ஆட்சியாளா்கள் உறுதுணையாக இருந்துள்ளனா். இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சாா்பில் நீதிமன்றம் செல்வோம் என்றாா் நாராயணசாமி.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT