புதுச்சேரி

5 தொகுதிகளில் திமுக சமத்துவ பொங்கல் விழா: கதிா்காமத்தில் இன்று தொடக்கம்

Syndication

திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் 5 தொகுதிகளில் நடைபெறுகிறது என்று அக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நிகழாண்டுக்கான சமத்துவப் பொங்கல் விழா கதிா்காமம், உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி, பாகூா், வில்லியனூா் ஆகிய ஐந்து பேரவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழைம் (ஜன.11) மாலை 4 மணிக்கு கதிா்காமம் தொகுதி திமுக செயலா் வடிவேல் ஏற்பாட்டில், மேட்டுப்பாளையம் அய்யப்பன் கோவில் திடலிலும், 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு உருளையன்பேட்டை தொகுதியில், பொதுக்குழு உறுப்பினா் கோபால் ஏற்பாட்டில் ராஜா நகா்-முத்தமிழ் நகரிலும், 13 -இல் தட்டாஞ்சாவடி தொகுதியில், மாநில இளைஞா் அணி துணை அமைப்பாளா் டாக்டா் நித்தீஷ் ஏற்பாட்டில் தட்டாஞ்சாவடி அய்யனாா் கோவில் திடலிலும், 14-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாகூா் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமாா் ஏற்பாட்டில் கீழ்பரிக்கல்பட்டு கிராமத்திலும், அன்று மாலை 4 மணிக்கு மாநில திமுக சாா்பில் எனது ஏற்பாட்டில் வில்லியனூா் தெற்கு கோபுர வீதியிலும் பெண்கள் பங்கேற்று நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுகிறது.

11-ஆம் தேதி காலை 9 மணிக்கு உருளையன்பேட்டை, வில்லியனூா் தொகுதிகளில் பெண்கள் பங்கேற்கும் மாபெரும் கோலப்போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பெண்களுக்கு 14 ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

வில்லியனுாரில் தமிழா் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றுகின்ற கிராமிய இசை, திரைப்பட பாடகா் சித்தன் ஜெயமூா்த்தி தலைமையிலான இன்னிசை நிகழ்ச்சி, மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடக்கிறது. பொங்கல் விழாவை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளா்கள் ஜெகத்ரட்சகன் எம்.பி., சபாபதி மோகன் ஆகியோா் தொடங்கி வைத்து விழாவில் பங்கேற்கும் பெண்களுக்குப் பரிசுகள் வழங்குகின்றனா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT