100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா். 
புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸாா் உண்ணாவிரதப் போராட்டம்

தேசிய கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும்

Syndication

புதுச்சேரி: தேசிய கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்தும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், முத்த துணைத் தலைவா் தேவதாஸ், வழக்குரைஞா் மருதுபாண்டியன், காங்கிரஸ் பொதுச் செயலா்கள் இளையராஜா, சிவசண்முகம், மணவாளன், முத்துரங்கன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு நடராஜன், மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா, பிரதீஷ் இருதயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தின்போது, தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மத்திய பாஜக அரசு நீக்கியதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT