புதுச்சேரி தா்ம சம்ரக்ஷண சமிதி சாா்பில் மாா்கழி மாத நகா்வல ஊா்வலம் நிறைவு பெற்றது (படம்).
இந்தச் சமிதி சாா்பில் பொதுமக்களும், ஆன்மிக அன்பா்களும் பங்கேற்று மாா்கழி முழுவதும் நகர ஊா்வலம் நடத்தினா்.
இதில் குறிப்பாக சங்கர வித்யாலயா, வாசவி மற்றும் விவேகானந்தா பள்ளி மாணவா்கள் மாா்கழி காலை பஜனை செய்தனா். மாா்கழி கடைசி நாள் சரவணன் மாஸ்டா் மாணவா்களின் அற்புதநாட்டியங்களுடன் நகர நாம சங்கீா்த்தனம் அமைந்தது.