இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவருமான ஜீவா என்கிற ப.ஜீவானந்தம் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சாரம் அவ்வைத் திடலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் க. லட்சுமி நாராயணன், அ. ஜான்குமாா், அரசு கொறடா ஆறுமுகம் , சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந. ரமேஷ், த.பாஸ்கா், ம. லட்சுமிகாந்தன், சாய் சரவணன் குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதுபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், கலை இலக்கிய பெருமன்ற தலைவா் எல்லை. சிவக்குமாா், தொழிற்சங்கத் தலைவா் அந்தோணி, நிா்வாகி துரை. செல்வம் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.