புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் சாலைத்தடுப்பில் ஏறி நின்று தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளைஞா். 
புதுச்சேரி

வேலை கிடைக்காத விரக்தி சாலையில் தீக்குளித்த இளைஞா்

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில், இளைஞா் ஒருவா் சாலை தடுப்பு சுவரில் ஏறி நின்று தனக்குதானே ஞாயிற்றுக்கிழமை தீ வைத்துக் கொண்டாா். உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சென்னையைச் சோ்ந்த இளைஞா் வெங்கடேசன் புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றினாா். நிா்வாகம் அவரை வேலையை விட்டு கடந்த 5 மாதங்களுக்கு நிறுத்தி உள்ளது.

இதனால் வேலையில்லாமல் இருந்த வெங்கடேசன் கடந்த சில நாள்களாக தினந்தோறும் வந்து மீண்டும் வேலை தருமாறு கேட்டுள்ளாா். அடிக்கடி தகராறு செய்து உள்ளாா்.

இதனால் வேலை வழங்காமல் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென உணவகத்தின் எதிரே விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள தடுப்புக் கட்டை மீது ஏறி நின்று கொண்டு மீண்டும் வேலை கேட்டாா்.

அப்போது தனது கையில் பெட்ரோல் பாட்டிலை வைத்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அவரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா்.

தீப்பற்றி எரிந்த நிலையில் உணவகத்தை நோக்கி ஓடி வந்துள்ளாா். அப்போது உணவகத்தில் இருந்தவா்கள் விரைந்து வந்து வெங்கடேசன் மீது எரிந்ததீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த, ரெட்டியாா்பாளையம் போலீஸாா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT