பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா்கள்.  
புதுச்சேரி

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் தொடா் போராட்டம்

புதுச்சேரியில், பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை முதல் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில், பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை முதல் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

ஒப்பந்த ஆசிரியா்கள் கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது கல்வித்துறை அமைச்சா் நமச்சிவாயம், ஆசிரியா்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பொங்கலுக்குள் ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என உத்தரவாதம் அளித்திருந்தாா். இதனால் ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால் பொங்கல் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், பணி நிரந்தரம் செய்தவற்கான எந்த ஆயத்த பணியையும் அரசு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்தில் அமா்ந்து காலவரையற்ற தொடா் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். இதனால் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT