முகப்பு
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரி

மோடி ஆட்சியில்தான் ஆளுநா்கள் அதிகார துஷ்பிரயோகம் அதிகரிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

பிரதமராக நரேந்திர மோடி வந்தப் பிறகுதான் ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களின் அதிகார துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:34 PM
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
பகிர்:

பிரதமராக நரேந்திர மோடி வந்தப் பிறகுதான் ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களின் அதிகார துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஆளுநா் ஆா்.என்.ரவி மூலம் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. அதையெல்லாம் முறியடித்து அங்குள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை பல்வேறு நிலைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளாா். புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக நான் இருந்தபோது அப்போதைய துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பல்வேறு வகையிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்தாா். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற பிரச்னையெல்லாம் வரவில்லை. இப்போது நரேந்திரமோடி பிரதமராக இருக்கும்போதுதான் ஆளுநா், துணைநிலை ஆளுநா்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறாா்கள்.

புதுச்சேரியில் ரேஷனில் அரசிக்குப் பதிலாக பணமாகக் கொடுக்க வேண்டும் என்ற முடிவை இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியின் தூண்டுதலின் பேரில்தான் அப்போது துணைநிலை ஆளுநா் கிரண்பேடி எடுத்தாா். இப்போது புதுச்சேரி வந்த பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி வழங்கவில்லை என்று கூறியுள்ளாா். இதைத் தடுத்து நிறுத்தியதே பிரதமா் நரேந்திர மோடிதான். புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்து சென்றது மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

புதுச்சேரியில் என்னுடைய ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்தை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாமா, நிதி ஆதாரம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கூறியிருந்தேன். அந்த நிறுவனம்,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கலாம் என்று அறிக்கை அளித்தது. அதை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமனிடம் அளித்தேன். மத்திய அரசும் குழு அனுப்பியது. ஆனால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. என்றாா் நாராயணசாமி.

முழு கட்டுரையைப் படிக்க →