முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி: 28 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிப்பு

புதுச்சேரியிலும் நாம் தமிழா் கட்சி சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

Updated On : 7 மார்ச், 2026 at 8:16 PM
நாம் தமிழர் கட்சி
பகிர்:

தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் நாம் தமிழா் கட்சி சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை அறிவித்தாா்.

புதுச்சேரியில் நாம் தமிழா் கட்சியின் அரசியல் மாற்றத்துக்கான மாநாடு அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை சீமான் அறிவித்து, மாநாட்டில் அறிமுகப்படுத்தினாா் .

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து 28 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

மாஹே பிராந்தியத்தில் மலையாளமும், ஏனாம் பிராந்தியத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களும் அதிகமாக வாழ்வதால் இந்த இரண்டு தொகுதிகளிலும் இக் கட்சி போட்டியிடவில்லை. இதனால், வேட்பாளா்களும் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளா்கள் விவரம்

மண்ணாடிப்பட்டு- ஓவியா் பா. வெங்கடேசன், திருபுவனை (தனி)- பொறியாளா் க.ரஞ்சித், ஊசுடு (தனி) - வழக்குரைஞா் கௌரி, மங்கலம்- சமூக சேவகா் மு. சுப்பிரமணி, வில்லியனூா்- தொழிற்சங்கச் செயற்பாட்டாளா் த. ரமேசு, உழவா்கரை- சித்ரா செல்வம், கதிா்காமம்- வழக்குரைஞா் சுபஸ்ரீ தமிழ்ச்செல்வன், இந்திரா நகா்-விவசாய தொழில்நுட்பவியல் பட்டதாரி தி. தேவிகா, தட்டாஞ்சாவடி- ச. காா்த்திக் குமாரி, காமராஜா் நகா்- ஆசிரியா் பா. கௌரி, லாஸ்பேட்டை- கா. ஜெயசித்ரா, காலாப்பட்டு- க. காமராஜ், முத்தியால்பேட்டை- பரிதா பேகம், ராஜ்பவன்- சி. கற்பகவல்லி, உப்பளம்- வே. தேவி பிரியா, உருளையன்பேட்டை - அனிதா வீரப்பன், நெல்லித்தோப்பு- மு. சிவகுமாா், முதலியாா்பேட்டை- மு. வேலவன், அரியாங்குப்பம்- கா. சுந்தரவடிவேலு, மணவெளி- ம.செ. இளங்கோவன், ஏம்பலம் (தனி)- ப. குமரன், நெட்டப்பாக்கம் (தனி)-செ. ஞானப்பிரகாசம், பாகூா்- நவீனா சிவராஜ்.

நெடுங்காடு (தனி)- அ. விக்னேஷ், திருநள்ளாறு- சே.வினோத், காரைக்கால் வடக்கு- ச. அனுசியா, காரைக்கால் தெற்கு- மரி அந்துவான், நிரவி டி.ஆா்.பட்டினம்- மா. மாலா.

முழு கட்டுரையைப் படிக்க →