முகப்பு
புதுச்சேரி

போலி மருந்து வழக்கு: அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 9 மார்ச், 2026 at 9:05 PM
சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலை மற்றும் கிடங்கு
பகிர்:

புதுச்சேரி: சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளா் சுகுமாரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் 4 வழக்குகளை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டதால் அவா்கள் 2 வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், சட்டத் துறை அதிகாரியின் வாய்மொழி அறிவுறுத்தலின்படி, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி 4 வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றுள்ளாா். இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய போலி மருந்து வழக்குகளை தன்னிச்சையாக திரும்பப் பெற்ற மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சட்டத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து, சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு, துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், சட்டத் துறைச் செயலா், சுகாதாரத் துறைச் செயலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கண்காணிப்பாளா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →