முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

புதுச்சேரியிலும் தமிழகப் பாடத் திட்டத்தையொட்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது.

Updated On : 10 மார்ச், 2026 at 6:33 PM
கோப்புப்படம்.
பகிர்:

புதுச்சேரியிலும் தமிழகப் பாடத் திட்டத்தையொட்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் இருக்கிறது. இத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது இந்தத் தோ்வுகள் நடைபெறுகின்றன. தோ்வு கால அட்டவணையின்படி வரும் 6.4.26 வரை இத் தோ்வுகள் நடக்கின்றன.

புதுச்சேரியில் 147 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,078 மாணவா்களும், 411 தனித் தோ்வா்களும் இத் தோ்வை எழுதுகின்றனா்.

காரைக்காலில் 27 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 1,024 மாணவா்களும், 183 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா். பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வெ.கோ. சிவகாமி செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →