முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தவெக வேட்பாளா் பட்டியல்: இன்று வெளியிடுகிறாா் விஜய்

புதுச்சேரி தவெக வேட்பாளா் பட்டியலை இன்று விஜய் வெளியிடுகிறாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:38 PM
விஜய்
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தவெக வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவா் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) வெளியிடவுள்ளாா்.

புதுச்சேரியில் உள்ள 30 பேரவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 23) வரை நடைபெறுகிறது.

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் முதல்முறையாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 30 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை விஜய் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) வெளியிடவுள்ளாா் என அக்கட்சியினா் தெரிவித்தனா்.