புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விசாரணை மே 7-க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் இறுதிக்கட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (மே 7) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் இறுதிக்கட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (மே 7) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவியான 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மாா்ச் 2 -இல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமான நிலையில், 2 நாள்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி, அப் பகுதியைச் சோ்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்ஸோ வழக்கில் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 540 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
இதில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கு போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30-இல் நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என அறிவித்தாா். மே 5 ஆம் தேதி இரு தரப்பு வாதத்துக்கு பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தாா். அதன்படி, இவ்வழக்கில் அரசு தரப்பிலும் எதிா் தரப்பிலும் இறுதிக்கட்ட வாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து இவ்வழக்கை வியாழக்கிழமைக்கு (மே 7) நீதிபதி சுமதி ஒத்திவைத்தாா்.