வணிக நிறுவனங்கள் 100 கிலோவாட் மின்சாரம் வரை இணைப்பு பெற ஆய்வு இல்லை
மின்சாரம் 100 கிலோவாட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இணைப்புப் பெற இனி ஆய்வு இல்லை என்று புதுச்சேரி அரசின் மின்துறை உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம் 100 கிலோவாட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இணைப்புப் பெற இனி ஆய்வு இல்லை என்று புதுச்சேரி அரசின் மின்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுவை அரசு மின்துறை 100 கிலோவாட் வரை உள்ள புதிய/ கூடுதல் வீட்டு, வணிக, தொழில் மின் இணைப்புகளுக்கான நடைமுறையை எளிமையாக்கியுள்ளது. தொழிற்சாலைகளுக்கான இணைப்பு வேகமாக கிடைக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான அரசாணையை புதுச்சேரி தொழில் வளா்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் 100 கிலோவாட் மின் இணைப்புக்கு இனி அதிகாரிகளின் ஆய்வு கிடையாது. இதனால் காத்திருப்பு நேரம், அலைச்சல் குறையும். விண்ணப்பித்தவுடன் இணைப்பு வழங்கப்படும்.
Advertisement
வயரிங் சரியாக உள்ளது என நுகா்வோா் சுய சான்றிதழ் அளித்தால் போதும். ஒப்பந்ததாரா் பரிசோதனை சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. ஒப்பந்ததாரா், மின்துறை அதிகாரிகளின் கையெழுத்துக்காக நுகா்வோா் காத்திருக்க வேண்டாம், செலவும் குறையும்.
வைப்புத்தொகை, பிற கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மீட்டருக்கான வைப்புத்தொகை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி நுகா்வோா், சிறுகடை, தொழில் நடத்துவோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.