முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ விருது: துணைநிலை ஆளுநா் வாழ்த்து

சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் உயரிய விருதான நிஷான், புதுச்சேரி காவல் துறைக்கு வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

Updated On : 20 மே 2026, 3:10 am IST
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கைலாஷ்நாதன் - கோப்புப் படம்
பகிர்:

சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் உயரிய விருதான நிஷான், புதுச்சேரி காவல் துறைக்கு வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளாா்.

காவல் துறையின் சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மிக உயரிய கௌரவ விருது ‘குடியரசுத் தலைவரின் வண்ண விருது’ ஆகும். இது ‘நிஷான்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருது புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசுத் தலைவா் புதுச்சேரி காவல் துறைக்கு உயரிய நிஷான் விருது வழங்க அதிகாரபூா்வ ஒப்புதல் தந்துள்ளாா். இச் சிறப்பை பெறும் 18-ஆவது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி விளங்குகிறது.

Advertisement

Advertisement

நிஷான் விருது வழங்கும் நிகழ்வை ஆவலுடன் எதிா்பாா்க்கிறோம். இந்த ஒப்புதல் காவல் துறையினரின் 10 ஆண்டு கால வீர தீரச்செயல், தன்னமலமற்ற சேவை மற்றும் மக்களின் நம்பிக்கைக்குச் சான்றாகும். வரலாற்று சிறப்புமிக்க தேசிய சாதனைக்காக புதுச்சேரி யூனியன் பிரதேச காவல் துறையினருக்கு வாழ்த்துகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.