முகப்பு
விழுப்புரம்

காவல் உதவி ஆய்வாளர் மாற்றம்

திருக்கோவிலூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பிரகாசம், கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திருக்கோவிலூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பிரகாசம், கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டார்.
 திருக்கோவிலூர் நகரில் போக்குவரத்துக் காவல் துறையினர் அத்துமீறி பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில், திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தையொட்டி உள்ள போக்குவரத்துக் கண்காணிப்பு அலுவலகம் எதிரே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் மனைவியுடன் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் போக்குவரத்து காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரகாசம் விழுப்புரம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →