முகப்பு
விழுப்புரம்

குன்னியூரில் சிதிலமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குன்னியூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம்

குன்னியூரில் சிதிலமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குன்னியூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற மாவட்ட நிர்வாகம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குன்னியூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது குன்னியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட நிலையில், பழைய நீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது (படம்).
 சிதலமடைந்த நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள தூண்களில் விரிசல் ஏற்பட்டும், தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள சிமென்ட் காரை பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது.
 இதன் அருகே பேருந்து நிறுத்தம், வீடுகள் அமைந்துள்ளதுடன், சிதிலமடைந்த நீர்த்தேக்கத் தொட்டியின் அடிப்பகுதியில் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 சிதிலமடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
 எனவே, இந்த நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →