சாராயம் கடத்தியவர் கைது
புதுச்சேரியிலிருந்து காரில் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தவரை மயிலம் அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
விழுப்புரம்சாராயம் கடத்தியவர் கைது
புதுச்சேரியிலிருந்து காரில் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தவரை மயிலம் அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து காரில் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தவரை மயிலம் அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அந்த காரில் 10 கேன்களில் 35 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டு பிடித்தனர்.
இது குறித்து கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் மயிலம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் முருகன்(34) என்பதும், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சாராயத்தை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. கடத்தப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் இருக்கும்.
இதையடுத்து, சாராயம் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுவிலக்கு போலீஸார் முருகனை கைது செய்தனர்.