பேரூராட்சியைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் பேராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினர் பேரூராட்சி அலுவலம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்பேரூராட்சியைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் பேராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினர் பேரூராட்சி அலுவலம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டையில் பேராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினர் பேரூராட்சி அலுவலம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச் சந்தை வளாகத்தில் சந்தையை நடத்தாமல், பொதுமக்கள் வசிக்கும் ஜூப்ளி சாலை, அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளிலும், திருச்சி, சேலம், சென்னை ஆகிய இடங்களுக்கும் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக சந்தையை நடத்த அனுமதி வழங்கியது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டித்தும் உளுந்தூர்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர பாஜக தலைவர் வீ.சௌந்தரராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.தாமோதரன், மாவட்டப் பொதுச் செயலர் வி.கண்ணன், செயலர் கே.ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.எம்.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் ஜெ.நவீன்குமார், திருநாவலூர் ஒன்றியத் தலைவர் எஸ்.சக்திவேல், நகரத் துணை தலைவர் மருது, வீரபாண்டியன், முத்துலட்சுமி, துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.