கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு பற்றி...
சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
Advertisement
Advertisement
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருக்கின்றனர்.
முன்னதாக, ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகையுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுமா? என்பது இன்று முடிவாகும் எனக் கூறப்படுகிறது.
கார்கேவின் அறிவுறுத்தலின்படி ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல சென்னை ப. சிதம்பரம் இல்லத்தில் இருந்து முதல்வர் வீட்டிற்கு ப. சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் ஒரே காரில் வந்தது குறிப்பிடத்தக்கது.
P. chidambaram meets Chief minister MK stalin on alliance for TN election 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.