முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் கடந்த ஆண்டைவிட விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளன: எஸ்.பி. தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 மாநிலத்திலேயே அதிக தொலைவுக்கு மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் விழுப்புரம் மாவட்டத்தில்தான் உள்ளன. இதனால் விபத்துகளும் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன. இந்த விபத்துகளைக் குறைக்க போக்குவரத்துத் துறை, காவல் துறை போன்ற துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
 இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் என்.ஹச்.45 எனப்படும் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்தச் சாலையில் வாகன விபத்துகளைக் குறைக்க ஜானகிபுரம், எல்லீஸ்சத்திரம், கூட்டேரிப்பட்டு, முண்டியம்பாக்கம், இருவேல்பட்டு, சாலாவதி, சாரம், ஜக்காம்பேட்டை, செண்டூர், செங்குறிச்சி போன்ற இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன.
 இவை அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தி இயக்க உதவுகின்றன. இதேபோன்று, பிற சாலைகளிலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
 இதன் பிரதிபலிப்பாக மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இதன் மூலம் உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டுள்ளது.
 கடந்த 2016 ஜனவரி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரையில் 3,863 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 904 பேர் உயிரிழந்தனர். நிகழாண்டு ஜனவரி முதல் இதுநாள் வரையில் 3,656 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80 சதம் குறைந்துள்ளது. மொத்த விபத்துகளில் இரு சக்கர வாகனங்களே அதிக எண்ணிக்கையிலான விபத்துகளில் சிக்கியுள்ளன. நிகழாண்டில் 1,056 இரு சக்கர வாகன விபத்துகளும், 655 கார் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 150 விபத்துகளில் அரசுப் பேருந்துகளும், 204 விபத்துகளில் தனியார் பேருந்துகளும் சிக்கியுள்ளன.
 மேலும், 33,476 சாலை விதி மீறில் வழக்குகளும், தலைக்கசவம் அணியாதவர்கள் மீது 1,43,473 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் மேலும் விபத்துகள், உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →