விழுப்புரம்

பைக் மீது டிராக்டர் மோதல்: தந்தை, மகள் சாவு

தினமணி

விழுப்புரம் அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் தந்தை, மகள் இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனர்.
 விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை அடுத்துள்ள கட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் (65). ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்.
 விழுப்புரம் வீனஸ் நகரில் வசித்து வந்தார். இவரது மகள் திவ்யபிரதா (25). மருத்துவர். இவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பின்னர், பணியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. சீதாராமன் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு திவ்யபிரதாவுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
 கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கிழக்கு பாண்டி சாலையில் வந்த போது, பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சீதாராமன், திவ்யபிரதா ஆகியோர் தவறி கீழே விழுந்தனர். அவர்கள் மீது டிராக்டர் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
 தகவலறிந்த வளவனூர் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீஸார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலை மிகவும் குறுகலாகவும், வளைவுடனும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT