விழுப்புரம்

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வாயில் கூட்டம்

தினமணி

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் சார்பில் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் எதிரே நடைபெற்றக் கூட்டத்துக்கு தொமுச தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு தலைவர் டி.ராமதாஸ் வரவேற்றார்.
 தொமுச பொதுச் செயலாளர் வி.சேகர், பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலர் எஸ்.ஞானமூர்த்தி, பொருளாளர் க.ராமலிங்கம், சிஐடியு தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலர் ஆர்.மூர்த்தி, நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலர் எம்.மணி, தேமுதொச பொதுச் செயலர் கே.ரகமத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி கடந்த மே 15, 16-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதனையடுத்து, அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது.
 இதில், ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்து வீண்செலவிட்ட ரூ.7 ஆயிரம் கோடி தொகையை திரும்ப வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
 ஓய்வூதியதாரர்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். தொடர்ந்து, அனைத்து கோரிக்கைகளையும் பேசி தீர்வு காணவும், நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினர். தொழிற் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT