முகப்பு
விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பேர் கைது

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் நகர உதவி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை காலை விழுப்புரம் முத்தோப்புப் பகுதியில் உள்ள குளிர்பானக் கடையில் ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப் பொருள் விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக விழுப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த அஸ்ரப் அலி (38) என்பவரை கைது செய்து, 6 பாக்கெட்டுகளில் இருந்த மாவாவை பறிமுதல் செய்தனர்.
 அதே போல விழுப்புரம் வடக்குத் தெரு பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப் பொருளை விற்பனை செய்ததாக பக்கீர் முகமது (60) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →