விழுப்புரம்

பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

விழுப்புரம் இ.எஸ். பொறியியல் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரத்த தான முகாமை கல்லூரியின் தலைவர் எஸ்.செல்வமணி தொடக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் கே.இந்திரா முன்னிலை வகித்து, ரத்த தானத்தின் அவசியம் குறித்துப் பேசினார்.
மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் சீ.மா.பாலதண்டாயுதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்களைப் பாராட்டினார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 45 மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
கல்விக் குழும நிர்வாக அதிகாரி குப்புசாமி, துணை அவைத் தலைவர் பத்மநாபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பாரத்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT