விழுப்புரம்

பாரதி மெட்ரிக். பள்ளியில் தகுதித் தேர்வு

தினமணி

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் பள்ளி நிறுவனங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகை வழங்குவதற்கான தகுதித் தேர்வு தச்சூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இத் தேர்வை கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நெய்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்நத 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர்.
 இத் தேர்வில் அரசு மற்றும் தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. கல்வி பயின்ற மாணவர்களுக்காக தனித் தனியாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டன.
 தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.
 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 100, 75, 50, 25 சதவீதம் எனகட்டணச் சலுகை வழங்கப்படும்.
 தேர்வு மதிப்பெண்கள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என பள்ளியின் தாளாளர் லட்சுமி கந்தசாமி தெரிவித்தார்.
 அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தங்கும் இடத்துடன் இலவச கல்வியும் கட்டணச் சலுகையும் வழங்கப்படும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT