விழுப்புரம்

மதுக் கடை சூறை: 50 பேர் மீது வழக்கு

தினமணி

உளுந்தூர்பேட்டை வட்டம் எம்.குன்னத்தூரில் டாஸ்மாக் மதுக்கடையை சூறையாடிய சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 எம்.குன்னத்தூரில் ஊரின் நடுவே செயல்பட்டு வந்த மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள், அந்தக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மதுக் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மதுப் புட்டிகளை எடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்தனர்.
 இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜானகிராமன் புதன்கிழமை கொடுத்த புகாரின்
 பேரில் எம்.குன்னத்தூரைச் சேர்ந்த பெண்கள் அஞ்சலை, பாக்கியம், ராணி, நவநீதம், ராமச்சந்திரன், மகாலட்சுமி உட்பட 50 பேர் மீது திருநாவலூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT