விழுப்புரம்

ஜூன் 1 -இல் புதிய கட்டடத்துக்கு இடம் பெயர்கிறது வேலைவாய்ப்பு அலுவலகம்

DIN

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஜூன் 1 முதல் புதிய கட்டடத்தில் செயல்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று கடந்த 23.7.2014-இல் அன்றைய தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம் ரூ.1.46 கோடி செலவில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டது. மே 16-ஆம் தேதி முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையடுத்து, வருகிற ஜூன் 1 முதல் இந்த புதிய அலுவலகக் கட்டடத்தில் செயல்பட உள்ளது. மாவட்டத்தைச் சார்ந்த வேலை நாடுநர்கள், தங்களின் வேலைவாய்ப்பு தேவைகள் தொடர்பாக, இனி மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT