கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் முதியவர் சாவு
கள்ளக்குறிச்சி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம்கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் முதியவர் சாவு
கள்ளக்குறிச்சி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் வசித்து வந்தவர் முத்துக்கவுண்டர் (75). இவர் புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டு மொபெட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது அவரது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், மொபெட்டில் மோதியதில் முத்துக்கவுண்டர் காயமடைந்தார்.
பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.