கந்துவட்டி புகார்: ஒருவர் கைது
விழுப்புரத்தில் கந்து வட்டிப் புகாரில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரத்தில் கந்து வட்டிப் புகாரில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் நாபாளையத் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் மாணிக்கம். இவரும், இவரது சகோதரர்கள் சீனுவாசன், பிரகாஷ் ஆகியோரும் பாத்திரக் கடை நடத்தி வந்தனர். கடந்த 10.7.2015 அன்று விழுப்புரம் ஜி.ஆர். பி. தெருவைச் சேர்ந்த குமரன் (எ) குமரேசனிடம் ரூ. 1 கோடியே 10 லட்சம் கடன் வாங்கினார்களாம். அதற்கு, அசலும் வட்டியும் சேர்த்து ரூ. 1 கோடியே 83 லட்சத்து 4 ஆயிரத்து 50 ஆகும்போது, இவர்களின் பாத்திரக் கடைக்கு எதிரே உள்ள கடையை குமரேசன் எழுதி வாங்கிக் கொண்டாராம்.
ஆனால், அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 7 கோடி இருக்குமாம். ஆகவே, மீதிப் பணத்தைக் கேட்டபோது, குமரேசன் கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் மகேஷ் மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் கந்து வட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த புகாரின் பேரில், புதன்கிழமை குமரேசன் விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்தனர்.