முகப்பு
விழுப்புரம்

பாஜக சார்பில் கருப்புப் பண ஒழிப்பு வெற்றி தினம்

செஞ்சி நகர, ஒன்றிய பாஜக சார்பில் கருப்புப் பண ஒழிப்பு வெற்றி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

செஞ்சி நகர, ஒன்றிய பாஜக சார்பில் கருப்புப் பண ஒழிப்பு வெற்றி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, செஞ்சி கூட்டு சாலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் நரேஷ்குமார், ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர் அன்பழகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.
ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமூர்த்தி, மாவட்டப் பிரசாரப் பிரிவுத் தலைவர் பசுமலை, நகரப் பொருளாளர் ராமு, துணைத் தலைவர் ரவி, ஒன்றிய பொதுச் செயலர் சத்தியசீலன் மற்றும் பாபு, சந்திரபாபு, சரவணன், தசரதன், சுப்பிரமணி, வழக்குரைஞர் பாஸ்கரய்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதாகவும், தீவரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →