விழுப்புரம்

விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி கைது

DIN

விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் வெங்கடேசன் (32) . தெருக் கூத்து நாடக தொழிலாளி. இவர் சனிக்கிழமை மாலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு வெங்கடேசனை தடுத்து, அவரது கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், வெங்கடேசனை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: வெங்கடேசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ராமு மகன் வெங்கடேசனுக்கும்(37) , இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் தகராறு ஏற்பட்டதாம். இதில், ராமு மகன் வெங்கடேசன், மற்றொரு வெங்கடேசனை கடுமையாகத் தாக்கினாராம். இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மது போதையில், விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வந்து வெங்கடேசன் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.
மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ், தீக்குளிக்க முயன்ற வெங்கடேசனை கைது செய்தார். மேலும், புகாருக்கு உள்ளான வெங்கடேசனையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT