முகப்பு
விழுப்புரம்

இன்று அரசு திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை (அக்.20) அரசு திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை (அக்.20) அரசு திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு திட்டத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் பெறுவதற்கான அரசு திட்ட முகாம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.20) பல்வேறு கிராமங்களில் நடைபெறுகிறது.
 விழுப்புரம் வட்டத்தில் பள்ளிபுதுப்பட்டு கிராமம், வானூர் வட்டம் - பொம்பூர் கிராமம், விக்கிரவாண்டி வட்டம் - செ.புதூர் கிராமம், திண்டிவனம் வட்டம் - அன்னம்பாக்கம் கிராமம், செஞ்சி வட்டம் - திருவதிக்குன்னம் கிராமம், மேல்மலையனூர் வட்டம் - சிந்தகம் பூண்டி கிராமம், திருக்கோவிலூர் வட்டம் - கொணக்கல்வாடி கிராமம், கண்டாச்சிபுரம் வட்டம் - திருமலைப்பட்டு கிராமம், உளுந்தூர்பேட்டை வட்டம் - கண்ணாரம்பட்டு கிராமம், கள்ளக்குறிச்சி வட்டம் - சாந்தை கிராமம், சங்கராபுரம் வட்டம் - வில்வந்தி கிராமம், சின்னசேலம் வட்டம் - மாவடிப்பட்டு கிராமம் ஆகிய கிராமங்களில் அரசு திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →