கள்ளக்குறிச்சியில் டெங்கு பாதிப்பால் பட்டதாரி பெண் சாவு
கள்ளக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம்கள்ளக்குறிச்சியில் டெங்கு பாதிப்பால் பட்டதாரி பெண் சாவு
கள்ளக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். சவூதியில் பணிபுரிகிறார். இவரது 2ஆவது மகள் பிரீத்தி (23). எம்.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பிரீத்தி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.